
மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவன் மாயம்!
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பி. செட்டி அள்ளியை பகுதியோ சேர்ந்தவர் மாதப்பன் மகன் நித்தீஷ் 15 வயது அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறான். சரியாக படிக்காமல் இருந்துள்ளான். தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில் பெற்றோர் அவனை படிக்கும்படி கூறியுள்ளனர். இதனால் கோபித் துக்கொண்டு கடந்த 29ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நித்தீஷ் மீண்டும் திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல்துறையில் புகார் அளித்தனர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
