
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் !
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்திற்குட்பட்ட,
மாங்காரை கிராமத்தில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று சுற்றி வந்துள்ளது. அருகில் இருந்த சுகந்தி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது. இதன் பெயரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்னாகரம் வட்டத்தை சேர்ந்த தீயணைப்புத் துறையினர், க.ரமேஷ்குமார் என்பவரின் தலைமையில் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட குழுவினர், 5 அடி நீளமுள்ள பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக..
டாக்டர்.மு.ரஞ்சித்குமார்
வெற்றி மற்றும்
சங்கீதா நாகராஜ்
