Police Department News

தருமபுரியில் இன்று மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் திமில்களை அடக்கி இளைஞர்கள் உற்சாகம்.

தருமபுரியில் இன்று மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் திமில்களை அடக்கி இளைஞர்கள் உற்சாகம்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந. ஸ்டீபன் ஜேசுபாதம் ,IPS மற்றும் ஏ டி எஸ் பி அண்ணாமலை தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தருமபுரி அடுத்த தடங்கம் கிராமத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் தருமபுரி மாவட்ட தலைமை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 3வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் 750 காளைகள் மற்றும் காளைகளை அடக்குவதற்காக 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு உள்ளனர். ஒரே நேரத்தில் சுமார் 20000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான கேலரி அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஏ டி எஸ் பி அண்ணாமலை தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த மாட்டிற்கான உரிமையாளருக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் வாடிவாசல் வழியாக வரும் காளைகளின் திமிலை பார்வையாளர்களின் உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாய் அளித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.