
FIRக்கு எஸ்பி அனுமதி தேவையில்லை.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு
கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பதற்றமான விவகாரங்களில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கடத்தல் விவகாரங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வதற்கு எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறையே விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார்.
தென்காசி அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை தாக்கிவிட்டு, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தில் உயரதிகாரிகள் அனுமதி வழங்காததால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்தே டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
