மதுரையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பாண்டி காம்பவுண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் சண்முகபாண்டி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.