காளி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் 3-காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு – பொதுமக்கள்அஞ்சலி
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50) இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஒயர்கள் அமைத்து உள்ளார்.
இந்த மின் ஒயர்கள் நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார்.அந்த வழியாக இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 5-காட்டு யானைக் கூட்டம் மின்சார ஒயரில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2-பெண் யானை மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யாணைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது.
இந்நிலையில் இறந்த மூன்று காட்டு யானைகளையும் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர், மேலும் பொதுமக்கள் யானையை புதைத்த இடத்தில் மாலை அணிவித்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தினார்.