
மக்கள் நலன் கருதி மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள் டிவி வயர்கள் அகற்றப்படுமா?
மின் கம்பங்களில் அனுமதியின்றி கேபிள் டிவி வயர்கள் இணைப்பு பெட்டிகள் வைத்துள்ளனர் இதனால் மின் கசிவு ஏற்பட்டு வீடுகளில் உள்ள டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைய மற்றும் தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் மின் ஊழியர்கள் பழுதை சரி செய்ய கம்பங்களில் ஏற சிரமப்படுகின்றனர், சில இடங்களில் இந்த வயர்களை துண்டிக்கும் போது கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் மோதலும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மின் வாரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் கேபிள் டிவி உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் தாங்களாகவே முன் வந்து வயர்களை அற்ற வேண்டும் இல்லாத பட்சத்தில் நாங்களே அகற்றுவோம் என கெடு விதிக்கப்பட்டது. இதை பெரும்பாலான உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை, நடவடிக்கை எடுப்போம் எனக்கூறிய மின்வாரிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் வயர்களை அகற்றாதவர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மக்களின் உயிரோடு விளையாடாமல் உடனடியாக மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நலன் கருதி கேபிள் டிவி உரிமையாளர்களும் தாங்களாகவே முன்வந்து வயர்களை அகற்ற வேண்டும்.
