
திண்டுக்கல் காவல்துறையில் 89 பேருக்கு சிறப்பு பரிசு எஸ்.பி.,வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளை விரைவாக கண்டறிந்து அவர்களை கைது செய்தும் களவாடப்பட்ட சொத்துக்களை கைப்பற்றியும் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்தில் வழக்கிற்கு எடுத்து விரைவாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க சாட்சிகளை ஆஜர் செய்தும் மற்றும் காவல் நிலையங்களில் அலுவலக பதிவேடுகளை சிறப்பாக பராமரித்த நற்செயலுக்காகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 6 காவல் ஆய்வாளர்ள் 15 சார்பாய்வாளர்கள் மற்றும் 67 காவல் ஆளினர்கள் என மொத்தம் 89 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணவெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கர் அவர்கள் வழங்கினார்.
