
பாலக்கோடு அருகே காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சிய நபர் கைது .40 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த உலகானஹள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுவதாக பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது, சிந்து அவர்களின்உத்தரவின் பேரில் மாரண்டஹள்ளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் உலகானஅள்ளி காட்டு பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தெரிவித்தார்.
உடனடியாக உலகானஅள்ளி அருகே உள்ள காட்டு பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நபரை பிடித்து விசாரனை செய்ததில் உலகான அள்ளியை சேர்ந்த முருகன் (வயது.50) என்பதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது, இதையடுத்து அங்கிருந்த 40 லிட்டர் சாராய ஊறல்களை கொட்டி அழித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
