
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சாமில்லில் பணத்தை திருடிய நபர் அதிரடி கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டரில் சிவம் உட் இண்டஸ்ட்ரீஸ் சாமில்லில். கடந்த 06.03.25. ம் தேதி சாமில்லில் இரவில் மேஜை லாக்கர் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூபாய் 45000 ஆயிரம் திருடு போனதாக வந்த புகாரின் வழக்கு பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளீதரன் மற்றும் தலைமை காவலர் ராஜா சிங் மற்றும் அல்போன்ஸ் ராஜா, கணேஷ் குமார் ஆகியோர்கள் சம்பவ இடம் சென்று விசாரித்து CCTV கேமராவை பார்த்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே சாமில்லில் வேலை பார்த்து வந்த வல்லம் ஆனந்த பெருமாள் மகன் மாரியப்பன்45 என்பது தெரிய வர அவரை கைது செய்து அவரிடமிருந்து திருடிய பணம் ரூபாய் 45,000/- ஆயிரத்தையும் மீட்டு எதிரி மாரியப்பனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டது.
