திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் சிவா மாரடைப்பால் மரணம்
திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தவர் சிவா கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர் அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிற நபர் என்ற பெயரை எடுத்தவர். இவர் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் காவல் துறையினர்
மத்தியில் மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.