
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்
புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு பன்றியை கொன்று வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வேட்டையில் ஈடுபட்ட சுப்ரமணியனுக்கு ரூ.40 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
