


குடும்ப பிரச்சனை காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்பகவுண்டர்தெருவை சேர்ந்த பைக் மெக்கானிக் பிரதீப் (வயது.23) இவருக்கும் கடமடையை சேர்ந்த செளமியா (21) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைப்பெற்றது இவர்களுக்கு குழந்தை இல்லை,
செளமியா ஓசூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு தினமும் வேலைக்கு சென்று வருகிறார், இதனால் கணவன் – மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது, இந்த நிலையில்
நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த பிரதீப் மனைவியிடம் இனிமேல் நீ வேலைக்கு செல்ல கூடாது என கூறியுள்ளார், சௌமியாவிற்க்கு நைட் சிப்ட் என்பதால் வேலைக்கு சென்று விட்டார்.
தனது பேச்சை கேட்காமல் மனைவி வேலைக்கு சென்றதால் விரக்தியடைந்த கனவர் பிரதீப் வீட்டில் உள்ள மின் விசிறியில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து நேற்று காலை வீட்டிற்க்கு வந்த செளமியா நீண்ட நேரம் அழைத்தும் கணவன் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது பிரதீப் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
