பாலக்கோடு அருகே வயகரா மாத்திரை விற்ற போலி டாக்டர் கைது .
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் சென்றன
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் .பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், சர்க்கரை ஆலை பகுதியில்
அதிரடி சோதனை மேற்கொண்டதில் ஊத்தங்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது.48) என்பவர் +2 மட்டுமே படித்துவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக மெடிக்கல் ஸ்டோரில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும்,மெடிக்கல் ஸ்டோரில் அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளான வயக்ரா, சில்டினாபில், நிமுஸ்லைட் உள்ளிட்ட மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்த குளுக்கோஸ்பாட்டில்கள், ஊசிகள், மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.