Police Department News

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆட்டோவில் சென்றவர் தவறி விழுந்து சாவு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆட்டோவில் சென்றவர் தவறி விழுந்து சாவு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்து விட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார் அவரை உடன் சென்றவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு சேர்த்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.