
மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 38க்கும் மேற்பட்டோர் பலியானதை ஒட்டி அதை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் அவர் வகித்து வந்த பொறுப்பை மாநில சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ., அருண் கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது அதே போல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக சென்னை கீழ்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்
