


மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம்
பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது.
இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் காவல் துணை ஆணையர் தெற்கு , அவனியாபுரம் சரக ஆணையர் ,காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
