
தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள்
புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி (வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் தவரான செய்திகளை பகிர்ந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் உடல்நல குறைவினால் இறந்த அவரது இறப்பு வருத்தத்திற்குறியது ஆனால் காவல் துறையினர் துன்புறுத்தலால்தான் அவர் இறந்து விட்டார் என சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இது உண்மையல்ல. சிறையில் இருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அதை ஒரு நீதிபதிதான் விசாரிப்பார் இந்த சம்பவத்தை பொறுத்த மட்டில் தாமதம் ஏதும் இல்லாமல் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது காவல் துறையினர் சார்பிலும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக தகவல் வருகிறது. இருப்பினும் ஏன் ஒரு சில விஷமிகள் அவருடைய இறப்பை பற்றி பொய் செய்திகள் பரப்புகின்றனர் என்று தெரியவில்லை. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது
சில சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த தகவலில் இறந்த நபரின் உடலில் ஏழு இடங்களில் காயங்கள் உள்ளதாக பகிரப்பட்டுள்ளது, ஆனால் முழுமையான Post Mortem ரிப்போர்ட்டை அவர்கள் வேண்டுமென்றே பகிரவில்லை. Whether injuries (individually or collectively) are sufficient to cause death in ordinary course of nature or not? என்ற பகுதியில் – இந்த காயங்களினால் இறப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதனை ‘No’ என உடற்கூறாய்வு செய்த மருத்துவக்குழு பதிவு செய்துள்ளனர். ஆனால் வேண்டுமென்றே அந்த பகுதியை மட்டும் மறைத்து சமூக வலைதளங்களில் பொய்யான பதிவை போட காரணம் என்ன?
மேலும் இறந்த நபரின் உடலில் உள்ள காயங்கள் எப்படி வந்தது? என்று விசாரித்த போது. நீதிபதி முன்பு ஆஜர் செய்த போது காவல்துறையினர் மீது எந்த புகாரும் இல்லை எனவும், அவர் உடம்பில் எந்தவிதமான வெளிப்படை காயமும் இல்லை எனவும். அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை அவருடைய உறவினரிடம் தகவல் தெரிவித்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலவச சட்ட ஆலோசகர், நீதிபதி முன் அவரை விசாரணை செய்த போதும், காவல் துறையினர் அவரை துன்புறுத்தவில்லை எனவும், அவருக்கு எந்த வெளிப்படையான காயங்களும் இல்லை எனவும் சான்றளித்துள்ளார்.
அவ்வாறு இருக்கையில், அவர் சிறையில் இருந்தபோது 12.06.2023 அன்று alcoholic withdrawal syndrome, non healing ulcer எனவும், 13.06.2023 அன்று banging over wall and jail gate, alcohol withdrawal syndrome, violent behaviour எனவும் சிறைச்சாலை மருத்துவரின் மருத்துவ பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது இவருக்கு அதிகமான குடிப்பழக்கம் உள்ளதால் சிறைக்கு சென்ற பிறகு, இவர் திடீரென குடியை நிறுத்தியதால் இவரது மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு சிறையில் இருக்கும்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் தன்னைத்தானே தாக்கி கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
காவல் நிலையத்தில் உள்ள கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் கூட காவல்துறையினர் அவரை துன்புறுத்தியதாக தெரியவில்லை என நம்பிக்கை வட்டாரம் தகவல்.
இதனால் பாதி விவரத்தை மட்டும் பகிர்ந்து, வேண்டுமென்றே முழு விவரங்களை மறைத்து சமுதாயத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாக்க நினைக்கும் சில சமூக விரோதிகளின் செயலை நாம் நம்ப வேண்டாம். நீதித்துறை நடுவரின் விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என காத்திருப்போம்.
