Police Recruitment

10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அனுப்பானடியில் உள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரிகரன்(வயது14). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில வாரங்களாக பள்ளி முடிந்ததும் ஹரிகரன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஹரிகரன் மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது சகோதரி பிரியதர்ஷினி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து சகோதரி ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹரிகரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார் .

இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை குறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பெற்றோர் கண்டித்ததால் ஹரிகரன் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. முன்னதாக மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.