Police Recruitment

தென்காசி மாவட்டம் காவல்துறையின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் காவல்துறையின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து காவல் துறையினரும் கலந்து கொண்டனர்

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்களின் தலைமையில் தென்காசி பொதிகை சில்க்ஸ் அருகே நடைபெற்றது இதில் அனைத்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் போதை பொருள் விபரீதம் பற்றிய எடுத்து கூறி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர் இதில் போதைப்பொருள் விபரீதம் குறித்து விளக்கும் வகையில்

போதைப் பொருளை எதிர்ப்போம்

போதைப் பொருளை ஒழிப்போம்

போதைப் பொருள் இல்லாத தென்காசிக்கு நான் பொறுப்பு

போதைப் பொருள் இல்லாத தென்காசிக்கு காவல் துறை பொறுப்பு

என்று சுவற்றில் எழுதி அதன் கீழ் விழிப்புணர்வில் ஈடுபட்ட அனைவரும் தங்களது கைகளை மையில் நனைத்து சுவற்றி பதித்து உறுதிமொழி எடுத்தனர்
இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சிறந்த முறையில் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது இது வெகுவாக பொதுமக்களை கவர்ந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திரு. தென்காசி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published.