







மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் மதுரை காவல் ஆணையர் திரு. நரேந்திர நாயர் அவர்களின் தலைமையில் மதுரை தமுக்கம் சந்திப்பில் இருந்து சுமார் 100 ஆட்டோக்கள். மற்றும் 300 மாணவர்கள் சகிதமாக விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் போதை பொருள் விபரீதம் பற்றிய புகைப்படங்களின் கண்காட்சி காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் போதைப்பொருள் விபரீதம் குறித்து விளக்கு வகையில் கஞ்சா அருந்திய நபர் எலும்பு கூடாக அந்த கஞ்சா சிகரெட்டை கட்டிப்பிடித்தபடி செல்லும் வகையில் ஒரு வாகனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த காட்சி சிறந்த முறையில் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது இது வெகுவாக பொதுமக்களை கவர்ந்தது. இந்த விழிப்புணர் ஊர்வலத்தை கணம் மாநகர துணை ஆணையர் தலைமையிடம் திரு.திருமங்களேஸ்வரன் அவர்கள் துவங்கி வைத்தார் . போக்குவரத்து துணை ஆணையர் திரு ஆறுமுகசாமி அவர்கள் துணை ஆணையர் தெற்கு திரு பிரதீப் அவர்கள் துணை ஆணையர் வடக்கு. போக்குவரத்து திட்ட பிரிவு கூடுதல் துணை ஆணையர் திரு.திருமலை குமார் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்விஅவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மாரியப்பன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு. ரமேஷ் குமார், திரு.A.தங்கமணி அவர்கள் திரு.கார்த்திக் அவர்கள் திரு.நந்தகுமார் அவர்கள் திருமதி. பஞ்சவர்ணம் அவர்கள் திரு.தங்கப்பாண்டி அவர்கள் திருமதி.ஷோபனா அவர்கள் திரு.கணேஷ் ராம் அவர்கள் திரு.சுரேஷ் அவர்கள் திரு.பூர்ணகிருஷ்ணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் மாணவர்களும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர்.
