
இளையாங்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளையான்குடி சரக காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பேரணியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், காவல் துறை அதிகாரிகள் சரவணக்குமார், முக்கண்ணன், மதுவிலக்கு பிரிவு காவல் துறை அதிகாரிகள் போஸ் மற்றும் அய்யனார் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இளையான்குடி கண்மாய் கரையில் தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் 300 மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகை கள் ஏந்தி கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா,நாசர் மற்றும் நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது அப்ரோஸ்,சேக் அப்துல்லா,பாத்திமா கனி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
