Police Recruitment

சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு

சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு

மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க இனி வரும் காலங்களில் வீடு தோறும் சி.சி.டி.வி. பொருத்தும் சூழ்நிலை ஏற்படும் என்றும், இது போன்று தெருக்களில் பொதுநல அமைப்புகள் சி.சி.டி.வி. காமிரா பொ ருத்துவதினால் குற்றவாளிகளை போலீசார் விரைந்து பிடிப்பதற்கும் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் மிக அவசியமாக இருக்கிறது.

மேலும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் போதை பொருட்கள் யாரேனும் விற்றால் அல்லது சந்தேகப்படும்படி புதிய நபர்கள் யாரேனும் தெருக்களில் வந்து சென்றால் உடனடியாக காவல்துறையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரியப்படுத்தும் அவர்களின் ரகசியங்கள் காக்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல் புரியும் நபர்களை போலீசார் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். முன்னதாக நற்பணி மையத்தின் தலைவர் கர்ணா வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி மணிகண்டன், பாண்டி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் சந்திரன், குணசேகரன், மோகன், பாஸ்கரன், பரதன், கண்ணன், சரவணன், பிரகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.