
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி யு சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
இதில் தமிழக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்யக் கோரியும்,
நிரந்த வேலை வேண்டியும், அத்துக் கூலி முறையை ரத்து செய்ய கோரியும்,
கான்ட்ராக்ட், சுய உதவிக் குழு, தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியமுறைக்கு மாற்றிடவும்,
50 வயது கடந்த தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
