
திருமணமான ஒரு வாரத்தில் மகள் மாயம், வாலிபர் மீது தந்தை போலீசில் புகார்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீங்கேரி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாது,
இவரது மகள் பத்மாவதி (வயது.19)
இவர் கடந்த 2 வருடமாக ஜக்கசமுத்திரம் அருகே உள்ள பந்தாரஅள்ளியை சேர்ந்த சின்னா மகன் சக்திவேல் (வயது. 23) என்பவருடன் பழக்கமாகி தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதனால் மாது பந்தாரஅள்ளியை சேர்ந்த தனது தங்கை மகன் கார்த்திக் என்பவருடன் பத்மாவதிக்கு கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி திருமணம் செய்து வைத்தார்.
கடந்த 7ம் தே மறு வீடு நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்தார்.
அன்று இரவு 8 மணி முதல் மகள் காணவில்லை,
மகள் காணாததை கண்டு திடுக்கிட்ட மாது மற்றும் அவரது குடும்பத்தினர்.
பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் பந்தாரஅள்ளியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மகளை கடத்தியிருக்கலாம் எனவும் மகளை கண்டுபிடித்து தரக்கோரி மகேந்திரமங்கலம் போலீசில் மாது புகார் அளித்தார்,
புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
