ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவருடையா கல்வி சான்றிதழை வாங்கி வைத்து கொள்வது சட்டப்படி சரியா?
ஒருவரை வேலைக்கு சேர்க்கும் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு சேரும் நபரிடமிருந்து அவர்களது கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ளுகிறார்கள் எதிர்பாராத காரணங்களுக்காக வேலையை விட்டு திடீரென ஒருவர் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் வேலை செய்த நிறுவனம் கல்வி சான்றிதழ்களை திரும்ப தர மறுப்பதுடன் மூன்று மாதம் முன்னரே வேலையிலிருந்து நிற்பவர் முன் அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறு அறிவிப்பு கொடுக்காமல் வேலையிலிருந்து விழக வேண்டுமென்றால் மூன்று மாத சம்பளத்தை திரும்ப தந்து விட்டு நிறுவன வசம் ஒப்படைத்த கல்வி
சான்றிதழ்களை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறி சான்றிதழ்களை திரும்ப தர மறுப்பதும் அச்சுறுத்துவதும் பல நிறுவனங்களில் நடந்து வருகிறது.
இவ்வாறு ஒருவருடைய கல்வி சான்றிதழ்களை நிறுவனங்கள் பெற்று வைப்பதும் தர மறுப்பதும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 406 ன்படி தண்டனைக்குறிய குற்றம்
சென்னை உயர்நீதி மன்றம் Cri.OP.no.9920/2012, என்ற வழக்கில் இதனை உறுதி படுத்தியுள்ளது ஒருவருடைய கல்வி சான்றிதழ் என்பது இந்திய சொத்துரிமை மாற்று சட்டப்பிரிவு 6 ல் கூறப்பட்டுள்ளது போல் மற்றவர் கைகளுக்கு மாற்றத்தக்க சொத்தல்ல இவ்வாறு கல்வி சான்றிதழ்களை தர மறுத்தால் IPC 406 பிரிவின்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.