
தென்காசி கூலக்கடை பஜார்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தென்காசி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
தென்காசியில் கூலக்கடை பஜார் பகுதியில் உள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு கே.எஸ். பாலமுருகன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சுதாகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு வெள்ள பாண்டி, காவலர்கள் திரு. சரவணகுமார் திரு அன்பரசன் திரு. சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது
தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த சலீம் 43/2023 த/பெ சாகுல் ஹமீது என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிலோ எடையுள்ள சுமார் 41,000 மதிப்புள்ளான குட்கா பொருட்களை கைப்பற்றினர். மேலும் விசாரணையில் அவர் அதிக லாபத்திற்கு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் குற்றாலம் வரும் சுற்றுலா நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார் என்பது தெரிய வந்தது.
