
தென்காசி அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலி
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை யில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தென்காசியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், சுப்பிரமணியன் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த மொபட்டும் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பள்ளி வேன் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
