ராமநாதபுரம் எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது
சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் சுதந்திரத் தின விழாவையொட்டி வழங்ப்படும் ஜனாதிபதி விருதுக்கு ராமநாதபுர மாவட்ட எஸ்.பி., தங்கத்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2005 ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். போலீஸ் துறையில் வழங்ப்படும் பல் வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். நாகபட்டினத்தில் மது விலக்கு பிரிவில் கூடுதல் எஸ்.பி.,யாக 2016 ல் பணிபுரிந்த போது உத்தமர் காந்தி விருது பெற்றுள்ளார்
அதன் பின் 2020 ல் ஈரோடு எஸ்.பி.,யாக பணிபுரிந்த போது தமிழக முதல்வர் விருது பெற்றுள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் பணிபுரியும் நிலையில் 18 ஆண்டுகள் சிறப்பான பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.