

தருமபுரி மாவட்ட காவல்துறையில்
பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட
வாகனங்கள்
ரூபாய் 5,73,000-/-க்கு
ஏலம் விடப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் 9 இருசக்கர வாகனங்கள்,6 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 5 லட்சத்து 73 ஆயிரத்து 976 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் அவர்கள் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சத்தியமூர்த்தி, மோட்டார் பொறியாளர் திரு.பழனிவேல் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏலம் எடுக்க வந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
