30.08.2023 இன்று எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு கக்கன் திரைப்படம் மூலம் ஆசானாகவும், நல்ல வைத்தியராகவும் திகழ்ந்தனர.
சென்னை பெருநகர சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கத்தில் கக்கன் திரைப்படத்தை இலவசமாக கண்டு களிக்கும் விதமாக சிந்தாரப்பேட்டை மற்றும் எழும்பூர் போலீசார் தலைமையில்
திரையரங்கத்தில் கண்டு கழித்தனர்
மேலும் மாணவ,மாணவிகள் தற்போது உள்ள சமூதாய சூழ்நிலையில் பலவிதமான தீயபழக்கத்தில் ஈடுபட்டு எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.குறிப்பாக மாணவர்கள் கீழ்படியாமலும், ஒழுக்கம் இல்லாமலும் இருக்கின்றனர் மற்றும் செல்போனுக்கு அடிமையாகி போதைக்கு அடிமையாகி படிப்பை இழக்கின்றனர் இப்படி மாணவர்கள் தன்னையும் தன்னை பெற்ற தாய் தகப்பன்மார்களையும் ஏமாற்றி சமுதாயத்தில் இருந்து விலகி இருக்கின்றனர்.
போதைக்கு அடிமையாகாத அளவில் தத்துவமான திரைப்படத்தை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த கக்கன் திரைப்படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
F1சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்(சட்டம் ஒழுங்கு). அவர்கள் மாணவ மாணவியர் வாழ்க்கை நன்றாக இருக்க சென்னை பெருநகர காவல்துறையினரோடு இணைந்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.