கெட்டுக் கொட்டாய் கிராமத்தில் தீராத வயிற்று வலியால் முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்து சாவு .
பாலக்கோடு, செப்.10-
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே கெட்டுக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முதியவர் முருகன் (வயது .62) கூலி தொழிலாளி.
இவருக்கு குடிப்பழக்கத்தால் தீராத வயிற்று வலி இருந்து வந்தது,
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகததால் விரக்தியில் காணப்பட்டவர்,
கடந்த 4ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நெல் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து, வாந்தி எடுத்து கொண்டிருந்தார்,
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்,
நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.