திம்மம்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் சூதாடிய 4 பேர் கைது.
480 ரூபாய் பணம் பறிமுதல் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது,
அவரது உத்தரவின் பேரில் எஸ்.ஐ.கோகுல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திம்மம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில் , அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான ராஜி(வயது. 25), சங்கர்(வயது. 39), சின்னசாமி (வயது38), பச்சியப்பன்(வயது . 37) என்பது தெரிய வந்தது, நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுக்கள் மற்றும் 480 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.