குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பா? இந்தி மொழி திணிப்பா?
நாடாளுமன்றத்தில் நடுவன் அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர 3 மசோதாக்களை நடுவன் அரசு உருவாக்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதா -23, குற்ற விசாரணை முறை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா மசோதா-23, இந்திய சாட்சிய சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக்ஷிய மசோதா-23, ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சட்டங்களை திருத்த வேண்டும் என்று பல வருடங்களாக பாதிக்கப்பட்டோர் கழகம் சொல்லி வந்தது. இப்போதுதான் அதற்கு தீர்வு வரப்போகிறது. ஆனால் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை பாதிக்கப்பட்டோர் கழகம் எதிர்க்கிறது.
நன்றி. நீதியை தேடி. சட்டப்பத்திரிக்கை
செப்டம்பர் 2023.பக்கம் 5.