
கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டல்
மதுரை மாவட்டத்தில் சைபர்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வளைதளங்களில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் அதனை நீக்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலிசாரிடம் புகாரளித்துள்ளார் அதன்படி அந்த நபரை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் இந்த உத்தரவின் கீழ் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போலிசார் விசாரணை நடத்தியதில் அந்த செயலில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுரளி வயது 22, எனவும் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்றும் தெரிய வந்தது.இதனை தொடர்து அந்த இருவரையும் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் இணைந்து பல கல்லூரி மாணவிகளின் படங்களை இவ்வாறு ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வளைதளங்களில் பதிவிட்டு பணம் பறீத்ததாக தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து செல் போன் சிம் கார்டு வங்கி ஏ.டி.எம் அகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
