Police Recruitment

சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம்

சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம்

மதுரை
சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்திருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம்ராவத் குழுவினர் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டு நடக்கிறது.
இதில் அமைதி, மதிப்பை உணர்தல், உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல், தன்மா னம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை, திருப்தி ஆகிய தலைப்பின் கீழ் தினந்தோறும் 45 நிமிட காணொளி சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இறுதி நாளான நேற்று இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறைவாசிகளுக்கு பிரேம்ராவத்தின் இளைஞர் அமைதி அமைப்பின் சார்பாக சான்றிதழ்களை மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்கா ணிப்பாளர் பரசுராமன் சிறை அலுவலர் மற்றும் நல அலுவலர்கள் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் சுமார் 200 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.