முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன? மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு:
கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால்., CRL. OP. NO – 15994/2010, DT – 2.1.2018, தீர்ப்பு விவரம்.
கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 கூறுகிறது.
ஆனால் இந்த குற்றச் செயலை பொறுத்தவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது. இருதார மணம் (Bigamy) குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் கீழ் தனிப் புகார் ஒன்றினை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமே தவிர, காவல்துறையினரிடம் புகார் அளிக்க முடியாது.
காவல்துறையினரும் FIR பதிவு செய்ய முடியாது.
அவ்வாறு இருதார திருமணம் தொடர்பாக காவல்துறையினர் FIR பதிவு செய்வது சட்டப்படி தவறானது ஆகும்.
அதேபோல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்துறையிடம் அளிக்கும் புகாரில் உடனடியாக ஒரு FIR-ஐ பதிவு செய்யக்கூடாது.
அந்தப் புகாரை மாவட்ட சமூகநல அதிகாரியின் விசாரணைக்கு அனுப்பி அவரிடமிருந்து ஒரு அறிக்கையை பெற்று அதன்பிறகே காவல்துறை FIR-ஐ பதிவு செய்ய வேண்டும். இது வரதட்சனை புகார்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO – 15994/2010
DT – 2.1.2018, D. கெளதமன் பாபு மற்றும் பலர் Vs ஆய்வாளர், W-16 அனைத்து மகளிர் காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையம், சென்னை 2018-1-TLNJ-CRL.
