
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றவர்கள் கைது
தேனி அருகே அல்லிநகரம் போலீசார் வெங்கலாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற பாண்டி முருகன் (வயது51) என்பவரை கைது செய்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடபுதுபட்டி பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற பாண்டி (49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு அருகே உள்ள கழிப்பறை பகுதியில் மது விற்ற பிரசாத் (20) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி போலீசார் குமராபுரம் மயான பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கார்த்திக் (27) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் உப்போடை பாலம் அருகே ரோந்து சென்றபோது மது விற்ற பாண்டியன் (39) என்பவரை கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கண்டமனூர் போலீசார் ஜல்லிக்கட்டு பிரிவு சாலையில் ரோந்து சென்றபோது மது விற்ற வேலுச்சாமி (42) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோம்பை ேபாலீசார் பண்ணைபுரம்- பல்லவராயன்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
