சீத்தா செட்டிக் கொட்டாய் கிராமத்தில் கனவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை .
தர்மபுரிமாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சீத்தா செட்டிக் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி சதீஷ்குமார் இவரது மனைவி சின்னபாப்பா (வயது. 31)
இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சதீஷ்குமார் தனது கூலி வருமானம் முழுவதும் தினமும் குடித்து விட்டு குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
மனைவி கனவரிடம் குடிபழக்கத்தை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
மீண்டும் நேற்று மாலை கனவன் குடித்துவிட்டு வந்ததால் மனமுடைந்த சின்னபாப்பா நேற்று வீட்டில் மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.