Police Department News

இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தாயாரின் கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தாயாரின் கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

கடலூர் மாவட்டம்
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம் சேலம் மெயின் ரோடு புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5ஆண்டுகளுக்குமுன்இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (40) செங்கல்சூளையில் கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய 2 மகள், கிரி என்கிற ஒரு மகன் உள்ளனர். மூத்தமகள் ஜெகன் பிரியாவை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இந்த நிலையில் மூத்த மகள் ஜெகன் பிரியாவின் கணவருடைய தம்பி ரூபன்பதி ஜெயமாலா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். உளுந்தூர்பேட்டையில் போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன்பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இரவு முழுவதும் அங்கிருந்த ரூபன் பதி மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ரூபன் பதி வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வீட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் துப்பட்டா துணியால் சத்திய பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் சத்யபிரியாவின் தம்பி கிரி புகார் கொடுத்தார் . அதில் தனது அக்காள் சத்யபிரியாவின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சத்திய பிரியா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூரில் இருந்து தடஅறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களைசேகரித்தனர்.தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலை மையிலான போலீசார் அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில் தாயாரும், தாயாரின் கள்ளக்காதலன் ரூபன் பதியும் சத்திய பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதுதெரியவந்தது. இவர்களது தொல்லையால் தான் இளம் பெண் சத்திய பிரியா தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.