
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பயணத்தை மத்திய ரிசர்வு படையை சேர்ந்த பெண் வீராங்களைகள் கன்னியாகுமரியில் துவங்கினர்.
குஜராத் ஏக்தா நகரில் இப்பயணம் நிறைவடையும் இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் நேற்று முன் தினம் மதுரை அம்பிகா கலை அறிவியல் பெண்கள் கல்லூரியை அவர்கள் வந்தடைந்தார்கள்
மேயர் இந்திராணி பொன் வசந்த் வரவேற்றார் ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிளாசம் தலைவர் கிருபா தியானேஸ் செயலாளர் ரேவதி பங்கேற்றனர்
நேற்று காலை 7 மணிக்கு பயணத்தை மதுரை டிஐஜி ரம்யா பாரதி துவங்கி வைத்தார்.
