நரிக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, உதவி ஆசிரியை செல்வி மேரி தலைமை தாங்கினர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.
நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிரவீன் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள், எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நம்பிராஜன், பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.