
தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியை வெட்டி ரூ.8 லட்சம் பறித்த 2 பேர் கைது
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் பாபு (47). இவர் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 30-ந்தேதி இரவு பிரகாஷ்பாபு மண்ணடி பகுதியில் உள்ள கடைகளில் ரூ.8 லட்சம் பணத்தை வசூல் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரகாஷ்பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளினர். மேலும் பிரகாஷ்பாபுவின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் பணப்பை மற்றும் 2 செல்போன்களை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுததொடர்பாக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ் (32), செங்குன்றத்தை சேர்ந்த சிவா(30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் இவர் சுரேஷ் மீது கொலை, கொள்ளை என 5 வழக்குகளும், சிவா மீது 12 வழக்குகள் உள்ளது. இந்த கொள்ளையில் தலை மறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
