


வெள்ளிசந்தையில் சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பலி.
தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அடுத்த கொல்லப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெரியசாமி (வயது.29) இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் ஜிட்டாண்ட .அள்ளியிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்,
வெள்ளி சந்தை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சரக்கு லாரியின் பின்புறம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
