
போக்சோ கைதி தப்பி ஓட்டம்,3 வார்டன்கள் சஸ்பெண்ட்
கோவை நஞ்சப்பா ரோடு மற்றும் காந்திபுரம் பாரதியார் ரோட்டில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து இரு பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.
சிறை நன்னடத்தை விதிகளின் கீழ் இங்கு கூடலூர் ஓவேலியை சேர்ந்த. போக்சோ தண்டனை கைதி விஜய் ரத்தினம் வயது 32/23 ,பணிபுரிந்தார். இவருக்கு 2019, ல் நீதி மன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. கோவை மத்திய சிறையில் கைதியாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பெட்ரோல் பங்க் பணிக்கு வந்திருந்தார் காலையில் சிறை போலீசார் கைதிகளின் எண்ணிக்கையை சரிபார்த்த போது விஜய் ரத்தினம் மாயமாகி இருந்தார் சிறை அதிகாரிகள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை வார்டன்
கனிராஜ் இரண்டாம் நிலை வார்டன் ஜெகநாதன் விக்னேஷ்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
