ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த மினி பஸ் விபத்தைத் தொடர்ந்து மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கலந்தாய் கூட்டம் நடைபெற்றது இதில் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் பெர்மிட் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் அதுபோக மாணவர்களையும் மற்ற பொது மக்களையும் படியில் பயணம் செய்யக் கூடாது மற்றும் அனைத்து வாகனங்களிலும் கேமரா பொருத்தும் படி அறிவுறுத்தப்பட்டது மேலும் படியில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது அதுபோக படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்தை அனைத்து வாகனத்திலும் எழுதும் படியும் மேலும் வாகனம் ஓட்டும்போது தலை கை வெளியே நீட்ட கூடாது என்பதை அந்தந்த வாகன ஓட்டுனர்கள் அறிவுறுத்த வேண்டும் என்பதை தெரிவிக்கப்பட்டது
அப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதிசெந்தாமரை மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.தர்மராஜ் , திரு.ராமகிருஷ்ணன் உடன்இருந்தனர்