
தீபாவளியின் போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 2095 பேர் கைது
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது அந்த வகையில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழகம் முழுவதும் 2246 பேர் மீது 2206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இவர்களில் 2095 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கைதானவர்கள் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
