
பாலக்கோடு ஆரதஅள்ளி சாலையில் மாம்பழம் ஜூஸ் கம்பெனி தொழிலாளி ஹிந்தி மொழி பேசியதால் தாக்கிய உள்ளூர் போதை அசாமிகள்.
4 பேர் கைது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதள்ளியில் மகா அக்ரோ மாம்பழம் கூல் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது.
இக் கம்பெனியில் பீகார் மாநிலம் புர்னகி கிராமத்தை சேர்ந்த மதன்குமார் (வயது.37) என்பவர் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை வேலை முடிந்து வெளியே வந்தவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்,
அப்போது சாலையில் மது போதையில் இருந்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது.27), ஜெயபிரகாஷ்(வயது.23), தமிழழகன்(வயது.25),
சந்தோஷ்குமார்(வயது.26) ஆகியோர் மதன்குமாரிடம் தமிழில் பேசி உள்ளனர், மதன்குமார் ஷிந்தியில் மொழியில் பேசியுள்ளார்,
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் உருட்டு கட்டையால் அடித்தனர்.
இதில் பலத்த காயமடைந்த மதன்குமாரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
