15 நாட்களில் போதைப் பொருள் கடத்திய 248 பேர் கைது: 783 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களாக நடத்திய வேட்டையில் 6 பெண்கள் உட்பட மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
783 கிலோ கஞ்சா, 10 கிராம் கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில் 7 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன