
தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள லாரியை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சரள் மணல் ஏற்றி வந்த லாரி விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.40லட்சம் ஆகும். இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் வன்னிராஜ் மகன் ராஜா கணேஷ் (30) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முள்ளக்காடு நேரசமணி நகரைச் சேர்ந்த தொம்மை மகன் லோகேஷ் (27) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
